சீனாவில் தற்போது பெய்து வரும் கன மழையில் 225 பேர் பலியாகிவுள்ளதாகவும் மத்திய ஹீ பெய் மாகாணத்தில் 2.5 இலட்சம் பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மற்றும் மத்திய சீனாவில் இடைவிடாது பெய்த மழையில் ஹ_பெய், ஹெனான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர்பும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இதேவேளை மழை காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கும் என சீன அரசு அறிவித்துள்ளது.