சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள்

சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேருக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவும்,தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை,பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது கண்டிப்பாக கவலைக்குரிய விடயம் எனவும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், எதிர்வரும் மாதங்களில் 2.1 மில்லியன் சீன மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைவார்கள் எனவும், நாளுக்கு 7,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பு கூறியுள்ள தகவலை ஒப்பிட்டு, நிபுணர்கள் இறப்பு எண்ணிக்கையை கணித்துள்ளனர்.

இதனிடையே, சீனாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் 16 பேருக்கு நோயை பரப்புவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்தியா உள்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

சீனாவில் கோவிட் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts