Ad Widget

சீனத் தொழிற்சாலை விபத்தில் 65 பேர் பலி

சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர் என சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

china_factory_1

சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்சுவில் உள்ள குன்ஷான் நகரில் ஏற்பட்ட இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தொழிற்சாலைக்கு வெளியில் காயமடைந்த தொழிலாளர்கள் அமர்ந்திருக்கும் காட்சிகளும் தொழிற்சாலை புகைமூட்டத்துடன் இருக்கும் காட்சிகளும் தற்போது வெளிவந்துள்ளன.

china_factory_2

மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜோங்ரோங்என்ற நிறுவனத்திற்கு இந்த தொழிற்சாலை சொந்தமானது என சீனாவின் தேசிய தொலைக்காட்சியான சிசிடிவி தெரிவித்துள்ளது.

ஜெனரல் மோட்டர்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.

சக்கரங்களைப் பளபளப்பாகும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அங்கு, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாகவும் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. ஆனால், சமீபகாலமாக சில தொழிலகங்களில் பாதுகாப்பு மேம்பட்டிருக்கின்றன என்பதுவும் குறிப்பிடத்தக்கது

Related Posts