திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன.
இந் நிலையில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, இந்த எண்ணெய்க் குதங்களை இநதியாவுக்கு வழங்கி அபிவிருத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், 10 எண்ணெய்க் குதங்கள் ஸ்ரீலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசம் வைத்திருப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.