முன்னதாக யாழ் நகரின் தந்தை செல்வா தூபிப்பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மரநடுகையினை மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் அறிவித்திருந்தார். எனினும் அவரிற்கு வீடு தேடி சென்ற இலங்கைப்படையினர் பகிரங்கமாகவே கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திட்டம் மாற்றஞ் செய்யப்பட்டு கல்வியங்காடு ஆடியபாதம் வீதியிலுள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் அலுவலக வளவில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர்களான குருகுலராஜா , ஜங்கரநேசன் ஆகியோருடன் உறுப்பினர்களான கஜதீபன், ஆனால்ட் ,சிவயோகன் ஆகியோர் இணைந்து மரநடுகையினை முன்னெடுத்திருந்தனர்.
படைப்புலனாய்வுப் பிரிவின் கண்களில் மண்ணினை தூவிவிட்டு முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவு மரநடுகை நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்கள் நினைவாக தமிழ் மக்கள் தத்தமது வீடுகளினில் மரங்களை நடுகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இரண்டு தினங்களுக்கு பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என சிறிலங்கா காவல்துறை எச்சரித்திருந்த நிலையிலும் இந்த மரக்கன்று நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.