சிவ கார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜீத் அவருக்கு அளித்த அறிவுரை குறித்து கூறியுள்ளார்.
விழா ஒன்றில் அஜீத்தும், சிவ கார்த்திகேயனும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, நீங்க நல்லா பண்ணிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயனை பாராட்டியிருக்கிறார் அஜீத். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிவ கார்த்திகேயன், கடும் முயற்சி பண்ணிட்டிருக்கேன் சார் என்றிருக்கிறார்.
உடனே அஜீத், அதெல்லாம் பண்ணாதீங்க. இப்ப பண்றதையே பண்ணுங்க என்றிருக்கிறார். அதாவது இப்போது பண்ணுவதைப் போல் சிம்பிளாக பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.
கமல் போன்றவர்களின் கடும் முயற்சிதான் பாராட்டப்படும். ரஜினி, விஜய் சிம்பிளாக நடித்தால்தான் ரசிக்கப்படும். சிவ கார்த்திகேயனும் அந்தவகையைச் சேர்ந்தவர் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அஜீத்.