சிவில் உடையில் வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்!

Sri_Lankan_Armyவடமராட்சிப் பகுதியில் வீடென்றில் நுழைந்த சிவில் உடைதரித்த இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 4 மணியளவில் கரவெட்டி இராஜசிங்கம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடென்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே நுழைந்த இராணுவத்தினர் அங்கு நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இன்னொரு இளைஞரை நிர்வாணப்படுத்தி ஆண் உறுப்பில் தாக்கியுள்ளனர். அதனை அவரது பேத்தியார் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட சாதனங்களையும் அடித்து நெருக்கி விட்டு அவர்கள் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் மோகன் நிரோஜன் (வயது 21) , இராசேந்திரம் சிவப்பி (வயது 62) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடென்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts