கூட்டுறவு அமைப்புக்கள் பலவற்றின் மில்லியன் கணக்கான நிதி கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தில் வைப்பிலிட்ட போது அதன் தலைவராக இருந்த சீ.வி.கே பொதுச்சபையின் தீர்மானமின்றி தன்னிச்சையாக மில்லியன் கணக்கில் பிரமுக வங்கியில் வைப்பிலிட்டார்.
அவ் வங்கி திவாலாக மத்திய வங்கி சுவிகரித்து கொண்டது. தற்போதைய நிலவரப்படி அவ்வாறு வைப்பிலிட்ட அமைப்புக்களின் நிதியை மீளச் செலுத்த 13 கோடி வேண்டும். மத்திய வங்கி வெறும் 5கோடியை தருவதாக சொல்கின்றபோதும் இது வரை தரவில்லை.
யாழ்க்கோ நிறுவனத்தின் பணம் ஒரு கோடி தாண்டும். இருந்தும் அதன் புதிய தலைவர் இ. சர்வேஸ்வரா விடாப்பிடியாக நின்று 40லட்சம் பெற்று மக்கள் வங்கியில் போட்டு விட்டார். இந் நிதி மோசடி தொடர்பில் எதுவும் வெளிவந்து விடக்கூடாது என்பதில் சீ.வி.கே மிகக் கவனம். அதனால் குறித்த கூட்டுறவு அமைப்புக்களுக்கு தன் சார்பு தலைவர்களை நியமிப்பதில் குறியாக இருந்தார். சர்வேஸ்வராவை கூட்டுறவு அமைச்சர் நியமனம் செய்ய முற்பட்ட நேரத்திலும் அவைத்தலைவர் தலையிட்டார். ஆனால் அவரின் அழுத்தம் தோற்றுவிட்டது. இது தொடர்பில் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்திருக்கிறார் என தெரியவருகின்றது.
இவற்றை எதிர்காலத்தில் கூட்டுறவுச்சங்கங்களில் தடுக்கவே அமைச்சரால் கூட்டுறவு நியதிச்சட்டங்கள் இயற்றப்பட்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன ஆனால் அவை அவைத்தலைவரால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.