சிவாஜி பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கலவை நான்: கமல்

சிவாஜி கணேசன் பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கவலை நான் என செவாலியே கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

kamal

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மட்டும் கமலை வாழ்த்தவில்லை. இந்நிலையில் விருது மற்றும் நடிப்பு பற்றி கமல் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

நடிப்புக்கான மரபணுவை கண்டுக்கும் வசதி அறிவியலில் இருந்தால் என் உடலில் சிவாஜி மற்றும் நாகேஷ் ஆகியோரின் மரபணுக்கள் இருப்பதை கண்டுபிடிப்பீர்கள்.

நான் நடித்து வரும் படத்தில் இருக்கும் சபாஷ் நாயுடு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் டி.எஸ். பாலைய்யா அவர்களை பார்க்க முடியும். அதனால் நான் பேசும்போது அது எப்பொழுதுமே கோரஸ் தான்.நான் பேசும்போது, நடிக்கும்போது கேட்கும் குரல் என்னுடையது மட்டும் அல்ல. அடக்கத்துடன் இந்த செவாலியே விருதை ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் என்னை பெற்றோர்கள் நல்லவிதமாக வளர்த்துள்ளனர்.

சிவாஜி கணேசன் மற்றும் சத்யஜித் ரேவுக்கு பிறகு எனக்கு செவாலியே விருது கிடைத்துள்ளது. பலருக்கு இரட்டை கவுரவங்கள் கிடைத்துள்ளதை உணர்கிறேன். ஆனால் அவர்கள் அதை பற்றி பேசுவது இல்லை. புகழுக்கும் பின்விளைவுகள் உள்ளது.

Related Posts