சிவாஜிலிங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விளக்கேற்றி படையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முப்படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தாலேயே சிவாஜிலிங்கத்தால் இவ்வாறு செயற்பட முடிகின்றதென்றும் கூறியுள்ளார்.

மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுவதோடு, இந் நாட்களில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts