சிவாஜிக்குப் பிறகு பசுபதிதான்: ஆர்.வி.உதயகுமார்

விமல், நந்திதா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சல’. இதில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தை தங்கம் சரவணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.

Pasupathy-reel-8

இதில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “அஞ்சல படத்தை திலிப் சுப்பராயன் தயாரித்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்திருக்கிறார். இப்படத்தில் நான் நந்திதாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். விமலும், நந்திதாவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள். விமல் ஒரு யதார்த்தமான நடிகர். கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர்.

பசுபதியின் நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். நான் சிவாஜியின் நடிப்புக்குத்தான் கைத்தட்டியிருக்கிறேன். சிவாஜிக்குப் பிறகு பசுபதியின் நடிப்பை பார்த்து கைத்தட்டியிருக்கிறேன். அந்தளவிற்கு பசுபதி நடித்திருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. வெற்றிப்படமாக இப்படம் அமையும்’ என்றார்.

Related Posts