சிவலிங்கா படத்தில் காமெடியில் கூடுதல் கவனம் செலுத்திய பி.வாசு!

பல அதிரடி ஆக்சன் மற்றும் செண்டிமென்ட் படங்களை இயக்கியவர் பி.வாசு. அதோடு சில படங்களை காமெடி கலந்த கதையிலும் இயக்கியிருக்கிறார். அந்த வகையில், ரஜினியை வைத்து அவர் இயக்கிய மன்னன் படம் அம்மா செண்டிமென்ட் மற்றும் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இயக்கிய அவர், பின்னர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை ஹாரர் மற்றும் காமெடி கதையில் இயக்கியிருந்தார். அந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான சிவலிங்கா படத்தை கன்னடத்தில் இயக்கிவிட்டு, இப்போது அதே படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சக்தி, ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திலும் சந்திரமுகி படத்தைப்போன்று காமெடி காட்சிகளை தூக்கலாக வைத்திருக்கிறார் பி.வாசு.

குறிப்பாக, தனது படங்களுக்கு தேவையான காமெடியை கதையோடு கலந்து எழுதக்கூடிய அவர், இந்த படத்தில் லாரன்ஸ், வடிவேலுவை வைத்து காமெடி ட்ராக் அமைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளை ரெடி பண்ணியிருக்கிறாராம். குறிப்பாக, வரும் ஆனா வராது -என்று அவர் எழுதிய காமெடி டயலாக் எப்படி ரீச் ஆனதோ அதேபோன்று காமெடி பஞ்ச்டயலாக்குகளும் இந்த படத்தில் நிறைய எழுதியிருக்கிறாராம் பி.வாசு.

Related Posts