சிவப்புதான் அழகா? விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை

சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார்.

Kangana_Ranaut

அதோடு அவர் எழுப்பியுள்ள மனிதத் தன்மையுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது. அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை.அப்படி இருக்கும் நிலையில், பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்.

அழகு கிரீம் விளம்பர வாய்ப்பை (ரூ.2 கோடி) மறுத்ததற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஒரு பொது மனுஷியாக எனக்குப் பொறுப்புகள் உள்ளன. என் சகோதரி மாநிறம் கொண்டவள். ஆனாலும் அழகானவள்.இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்ய முடியும்? என்கிறார் கங்கணா.

மற்ற நடிகர்கள் சிந்திப்பார்களா?

Related Posts