சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!!

யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts