சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார் போல

சமீபத்தில் அஞ்சான் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் எடக்கு முடக்கான ஒரு வெடிகுண்டை போட்டார்.

surya_sivakumar

அதாவது சூர்யா வளர, வளர அவருடைய அப்பா சிவகுமார் பெயரை கெடுத்திடுவார்னு நினைக்கிறேன் என்றார், இதை கேட்ட அரங்கமே சற்று அதிர்ந்தது, அதற்கு அவர் விளக்கமும் கூறினார்.அதாவது, சினிமாவில் அடக்கம், அமைதி, பணிவுக்கு பெயர் போனவர் சிவகுமார். அவரை முந்திக்கொண்டு இப்போ சூர்யா எல்லா விழாக்களிலும், எல்லோரிடமும் ரொம்ப அடக்கமாகவும், அமைதியாகவும், பணிவோடும் நடந்து கொள்கிறார் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் தற்போது கூட நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்த சூர்யா, நான் உங்ககூட நடிக்கிறேன்னு தெரியுமா? என்று என்னிடம் கேட்டார்.ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நான் நடிப்பதை, அவர் என்னுடன் நடிப்பதாக கேட்டது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் இணைந்து நடிப்பதை இந்த பிறந்தநாளில் சூர்யா தனக்கு கொடுத்த விருந்தாக நினைக்கிறேன் என்றார்.

Related Posts