சிவகார்த்திகேயன் யாருடைய ரசிகர்!

வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் ரசிகர்களாக நடிப்பது சமீபகாலமாக சினிமாவில் நடந்து வருகிறது. அந்த வகையில், சிலர் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களாக நடித்துள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன், நான் சின்ன வயதில் இருந்தே ரஜினி ரசிகர் என்கிறார். அதோடு, அஜித் ரசிகர் என்றும் சொல்லிக்கொள்கிறார். இந்நிலையில், அவர் நடித்துள்ள ரெமோ படத்தின் ட்ரெய்லரில் ரஜினி, அஜித் இருவரையும் குறிப்பிட்டு வசனங்கள் பேசியுள்ளார்.

முக்கியமாக, ரஜினியை குறிப்பிடுகையில், நம்ம தலைவரோட பேனர் மாதிரி இதே சத்யம் தியேட்டரில் நம்ம பேனரும் வரனும் என்று ட்ரெய்லரில் டயலாக் பேசியுள்ள சிவகார்த்திகேயன், இன்னொரு இடத்தில் தெறிக்க விடனும் என்று அஜித்தின் டயலாக்கையும் பேசியுள்ளார். ஆக, ரஜினி, அஜித் ரசிகர்களிடம் உண்மையில் சிவகார்த்திகேயன் யாருடைய ரசிகர் என்கிற கேள்வி எழுந்தபோதும், எப்படியிருந்தாலும் நம்ம தலைவர்களை அவர் படத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று ரஜினி, அஜித் ரசிகர்களும் ரெமோ ட்ரெய்லரை உலக அளவில் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

Related Posts