சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி கொடி கட்டியவர் சிவகார்த்திகேயன்.
ஒரு சிலர் வெற்றிகள் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், பழைய நண்பர்கள் என அனைவரையும் மறந்து விடுவார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் இன்றும் தன் பழைய நண்பர்களை எங்கு பார்த்தாலும் முன்பு எப்படி கலாய்ப்பாரோ அதே போல் ஜாலியாக தான் பேசுவாராம்.
அதிலும் குறிப்பாக தன் சின்னத்திரை நண்பர்களுடன் எந்த ஒரு வேறுபாடு இல்லாமல் பழகுகிறார் என அனைவரும் கூறுகின்றனர்.