சிவகார்த்திகேயன் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் டைரக்டர் ஷங்கர்!

முதன்முறையாக சிவகார்த்திகேயன் மெகா பட்ஜெட்டில் நடித்துள்ள படம் ரெமோ. இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல்பூக்குட்டி என பிரபல கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

sivakarthikeyan

இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ள சிவகார்த்திகேயன், அந்த கெட்டப்புக்காக தனது உடல எடையை குறைத்ததோடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். தனக்கு இந்த ரெமோ முக்கியமான படம் என்பதால் கடினமாக உழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மேலும், தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருப்பதால், படத்திற்கான பப்ளிசிட்டிகளையும் ஒவ்வொன்றாக ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் ரெமோ படத்தின் மேக்கிங் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இன்னொரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டீல் பாடல் ஜூன் 23-ந்தேதி அதாவது நாளை வெளியாகிறது. இதை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிடுகிறாராம்.

Related Posts