சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் ஒரு பாடல், இரண்டு சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் வசந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சென்னை 600 028 II)’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் வசந்த் எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

‘வேலைக்காரன்’ படத்திற்காக சென்னையில் ரூ.5 கோடி செலவில் சேரி ஒன்றை ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் நிறுவியுள்ளார். அதில், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மேலும், 20 நாட்கள் சென்னையில் உள்ள முக்கியமான குடிசை பகுதிகளில் சென்று படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் முடித்துவிட்டு படக்குழுவினர் 35 நாட்கள் மலேசியாவில் சென்று படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அங்குள்ள மிகப்பெரிய பேக்டரிகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘வேலைக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர்கள் தினத்தில் வெளியிடவுள்ளனர். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Related Posts