சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்

VSOP என்ற பிரபலமான மது பிராண்டைக்குறிப்பதுபோல் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்று தன் படத்துக்கு பெயர் வைத்தார் ராஜேஷ். VSOP என்ற தலைப்பே இளைஞர்களின் கூட்டத்தை தியேட்டருக்கு இழுத்துவரும் என்று கணக்குப்போட்டார். அதற்கு மாறாக அந்தப்படம் படு தோல்வியடைந்தது. ஆனாலும் அதே பாணியில் தன்னுடைய புதிய படத்துக்கும் பெயர் வைத்திருக்கிறார் ராஜேஷ். ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்பதுதான் ராஜேஷ் இயக்கும் படத்தின் பெயர் என்றாலும், அப்படத்தை ‘KIK’ என்றே குறிப்பிடுகின்றனர்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை அணுகினார்கள். அவர் பெரிய சம்பளம் கேட்டதால் ஜி.வி.பிரகாஷ் குமாரை கதாநாயகனாக்கிவிட்டனர். ‘டார்லிங்’ படத்தில் நடித்த நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷும், ஜிவி.பிரகாஷும் முதன் முதலாக இணையும் இப்படத்தின் பூஜை 11.03.2016 அன்று நடைபெற்றது. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார்.

Related Posts