சிவகார்த்திகேயன் அடுத்த படம் நவம்பர் 11ல் ஆரம்பம்

24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த ‘ரெமோ’ படம் கடந்த வாரம் வெளிவந்த வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் அறிமுக விழாவின் போதே அடுத்தடுத்து சில புதிய படங்களை அறிவித்தார்கள். அதில் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட படம் மோகன் ராஜா இயக்கும் படம். கடந்த சில மாதங்களாகவே இப்படத்திற்கான கதை விவாதம் நடந்து வந்தது. ‘ரெமோ’ படத்தின் வேலைகளை முடிந்த பின் இந்தப் புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியானது.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ள இந்த புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மலையாளத்தின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி, ரோகிணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மோகன்ராஜா இயக்கும் படத்திற்கு அனிருத் முதன்முறையாக இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மோகன்ராஜா இயக்க உள்ள படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ம் தேதி ஆரம்பமாகும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு அல்லது கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts