சிவகார்த்திகேயனை இயக்கும் அஜித் பட இயக்குனர்!

சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தற்போது அஜித் நடிக்கும் 57வது படத்தை இயக்கி வருகிறார். ஆக, அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பினை பெற்ற முதல் இயக்குனராகியிருக்கிறார் சிவா.

siva

மேலும், அஜித்துக்கு முதல் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அவர், இந்த மூன்றாவது படத்தை இன்னும் மெகா ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், அஜித் படத்தை இயக்கி முடித்ததும், அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம் சிவா. ரெமோ படத்தின் மூலம் அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை முடித்ததும் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து விட்டு, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். காக்கி சட்டை படத்தில் ஆக்சனுக்கு அடித்தளம் போட்ட சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லை. என்றபோதும், சிறுத்தை படம் போலவே மீண்டும் சிவா ரெடி பண்ணியுள்ள ஒரு அதிரடியான ஆக்சன் கதையில் நடிக்கப்போகிறாராம் சிவகார்த்திகேயன்.

Related Posts