சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஹன்சிகா!

சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக இணைந்து நடித்த மெகா நடிகை ஹன்சிகா. அவர் நடித்த பிறகுதான் மற்ற முன்னணி நடிகைகள் அவருடன் நடிப்பதில் ஆர்வம் காட்டினர்.

siva-karthikeyan-hansika-motwani-still-from-maan-karate_139529972490

தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் சிவகார்த்திகேயனை மீண்டும் இயக்கும் படத்தில் சமந்தா நடிக்கிறார். இந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பொன்ராம் படத்தை அடுத்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் தமன்னா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தே படத்தில் நடித்த ஹன்சிகா அப்படத்தில் அவருடன் மீண்டும் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக, அடுத்தடுத்து சிவ கார்த்திகேயனுடன் நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா என முன்னணி ஹீரோயினிகளாக ஜோடி சேருகின்றனர்.

Related Posts