சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்! ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிர பலமானவர் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து காக்கி சட்டையிலும் நடித்தார். அதோடு, சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்களால் கருதப்பட்டவர் ஸ்ரீதிவ்யா.

என்றாலும், பின்னர் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் என்று நடிக்கத் தொடங்கி விட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக நயன்தாராவுடன் ஜோடி சேரப்போகிறார். ஆக, மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் சிவகார்த்திகேயன் நடிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

ஆனால் இதுபற்றி ஸ்ரீதிவ்யாவைக்கேட்டால், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், ஒரு படத்திற்கான கதையை ரெடி பண்ணும்போதே, அந்த படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை டைரக்டர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். அந்த வகையில், எனக்கான கதை அமையும்போது கண்டிப்பாக மீண்டும் நான் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன் என்கிறார்.

அதோடு, நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதாதால் எனது மார்க்கெட் சரிந்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் இப்போது நான் நடித்துள்ள மாவீரன் கிட்டு, காஷ்மோரா இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறும்.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் மட்டுமின்றி மற்ற பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கும் என்கிறார் ஸ்ரீதிவ்யா.

Related Posts