சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்

சிவகார்த்திகேயன் – கீர்த்திசுரேஷ் நடித்த ‘‘ரஜினி முருகன்’’ திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இந்த படம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. எனவே, இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பது தொடர்பாக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. கதை நன்றாக இருந்ததால் எந்தவித கருத்தும் சொல்லாமல் உடனே நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்புக் கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயனுடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்வதால் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் பெயர் மற்றும் உடன் நடிக்கும் நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts