சிவகார்த்திகேயனுக்கு என்னைவிட தமிழ் ரசிகர்கள் அதிகம்: மாதவன்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய அளவில் பிரபலமான ஹீரோவான மாதவன் படத்தின் டிரைலரை வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு பலரும் மாதவனை கேள்வி கேட்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த மாதவன், ‘சிவகார்த்திகேயன் சிறந்த மனிதர். திறமையான நடிகர். மேலும் என்னை விட அதிக தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.’ என்று பதிலளித்திருக்கிறார்.

‘இறுதிச்சுற்று’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

Related Posts