சிவகார்த்திகேயனுக்காக மனம் இரங்கிய ரகுமான்!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது காவியத்தலைவன், லிங்கா, ஐ படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

rahman_sivakarthikeyan

இந்நிலையில் இப்படங்களையெல்லாம் முடித்துவிட்டு, பாலிவுட் பக்கம் செல்லலாம் என்று முடிவு செய்த ரகுமான், மீண்டும் ஒரு தமிழ் படத்திற்கு இசையமைக்க சம்மதித்து இருக்கிறாராம்.

அது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படம் தானாம். முன்னணி நடிகர்களுக்கே இசையமைக்க யோசிக்கும் இவர், ஏன் சிவாவிற்கு சம்மதித்தார் என்றால், சமீபத்தில் நடந்த விருது விழாவில் சிவா தன் அப்பாவை பற்றி பேசிய போது ரகுமானை வெகுவாக பாதித்ததாம். அதனால் தான் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இதை தொடர்ந்து படத்தை பற்றிய முறையான அறிவுப்புகள் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts