எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டாணா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு பின்னர் காவல்காரன், காக்கிச்சட்டை ஆகிய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் காக்கிச்சட்டை என்ற தலைப்பு தேர்வு செயப்பட்டது.
இப்படத்தினை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், பொன்ராமும் இணையும் படம் இது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 30-ஆம் தேதி காரைக்குடியில் துவங்கவிருக்கிறது.
திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கோடி சம்பளத்துக்கு இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும், மான்கராத்தே படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இவ்விரு படங்களின் வெற்றி காரணமாக தற்போது சிவகார்த்திகேயனுக்கு 10 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
பழைய கமிட்மெண்ட் என்பதால் ரஜினி முருகன் படத்தில் ஏற்கனவே பேசிய ஒரு கோடி சம்பளத்துக்கு நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.