சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரஜினி முருகன்’ ?

‘எதிர்நீச்சல்’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன்.

முதலில் இப்படத்துக்கு ‘டாணா’ என்று டைட்டில் வைத்திருந்தனர். தற்போது ‘காக்கிசட்டை’ என டைட்டிலை மாற்றுவது குறித்து யோசித்து வருகின்றனர். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை அடுத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ‘ரஜினி முருகன்’ என்கிற டைட்டில் வைக்கலாம் என பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.

siva-karaththekeyan

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி அதிகம் பேசப்பட்டது, எனவே இப்படத்திலும் அந்தக் கூட்டணி தொடர்கிறது.

படத்தின் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துப் போனதால் ராஜ்கிரண் இப்படத்தில் நடிக்கிறாராம். மேலும் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்தில் சமந்தாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது. ஆனாலும் யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts