சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு சிவகரன் உதவி செய்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே சிவகரன் கைது செய்யப்பட்டார் எனவும் சிறீலங்காவின் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தச் செய்தி வெளியானதும் ஊடகப்பிரிவை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக புதிய காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர காவல்துறையின் ஊடகப்பிரிவை முடக்கியதுடன், இந்தச் செய்தியை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் காவல்துறையினர் ஒருபோதும் வாய்மூல அறிக்கை அளிக்கக்கூடாது எனவும் எழுத்துமூல அறிக்கையே ஊடகங்களுக்கு வழங்கவேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காவல்துறையின் ஊடகப்பிரிவின் தொலைபேசி இலக்கங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.