சில ஹோட்டல்களில் உண்பவர்கள் இன்னும் உயிர்வாழ்வது ஆச்சரியம்-ஜனாதிபதி

நாட்டிலுள்ள சில ஹோட்டல்களுக்கு சென்று சமையல் செய்வதனைப் பார்த்தால், அந்த ஹோட்டலில் உணவு உண்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இவ்வாறான ஹோட்டல்களில்சமைக்கும் உணவுகளை உண்பவர்கள் இதுவரையில் உயிர்வாழ்வதும் பெரிய ஆச்சரியமான ஒன்று எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேட நிகழ்வு கொழும்பில் நேற்று (15) இடம்பெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.

இலங்கையிலுள்ள உணவு சமைக்கும் ஹோட்டல்களின் சமையல் அறைக்குச் சென்றால் சாப்பிட மனம் வருவதில்லை. இதுதான் உண்மையான நிலை. கடந்த வருடத்தில் ஹோட்டல் ஒன்றை சோதனையிட அதிகாரிகள் சென்ற போது, பரிமாறுவதற்காக சமைத்திருந்த ரொட்டியை சமையல் அறையிலுள்ள ஊழியர் ஒருவர் தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதனைத் தான் எமது நாட்டு மக்கள் உண்கிறார்கள். இதனைச் சாப்பிடுபவர்கள் உயிருடன் வாழ்வது ஆச்சரியம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts