சில வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுகின்றனர் : விளையாட்டுத்துறை அமைச்சர்

சில இலங்கை வீரர்கள் உடற்தகுதியை பெற்று இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
சிக்கார் தவான் 100க்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்த பின்னர் களைப்பின்றி களத்தடுப்பில் ஈடுபட்டார். இதற்கு காரணம் அவர்களது உடற்தகுதியாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிரிக்கட் வீரர்களுக்க இராணுவப்பயிற்சி தேவையற்றதென்று இலங்கை வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பாகவே செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இதற்கு ஒவ்வொரும் தெரிவிக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.

இலங்கை வீரர்கள் உடற்தகுதிக்கு (Fitness) பின்னரே போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.இதன்மூலம் இலங்கை வீரர்கள் தகுதியற்றவர் என்ற கருத்தாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால கிரிக்கட் போட்டிகளின் போது போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தகுதிபெறுவது கட்டாயம் ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளில் கிரிக்கட் விளையாட்டுக்களில் பங்குகொள்ளும் வீரர்கள் இந்த உடற்தகுதியுடன் இருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான வீரர்களுடன் இலங்கை வீரர்கள் விளையாடும் பொழுது சொற்பநேரத்துக்குள் சோர்ந்துவிடுவதை காணக்கூடியதாக உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts