சில்லறை வர்த்தகர்களும் வரி செலுத்துவது அவசியம்

மருந்துப் பொருள்களைத் தவிர ஏனைய பொருள்களை மொத்த மாகவோ சில்லறையாகவோ விநியோகம் செய்யும் வர்த்தகர்கள், ஒருவீதம் விற்பனை வரியைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று யாழ்.பிராந்திய உள்நாட்டு இறை வரித் திணைக்களப் பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்தார்.யாழ்.வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள பொருள் விநியோகம் செய்வோருக்கான கலந்துரையாடல் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விநி யோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போதே மேற்கண்ட வாறு இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த தாவது:

மூன்று மாவட்டங்களிலும் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் மாதாந்தம் சராசரியாக 4 லட்சம் சிமெந்து பைக்கற்றுகளும், 11 ஆயிரம் அங்கர் பைக்கற்றுகளும் விற்பனை ஆகின்றன என வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.பிராந்திய அலுவலகத்தில் வருமானவரி, தேசத்தைக் கட்டி எடுப்புவதற்கான வரி, விருப்பத்துக்குரிய பெறுமதி வரி போன்ற வரிகள் அறவிடப்படுகின்றன. இந்த வரி அறவீட்டு நடவடிக்கைக்கு பொதுமக்கள், வர்த்கர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் ஆகியோர் பூரண ஒத்துழைப் பினை வழங்கி வருகின்றனர்.

இந்த வரிகள் ஒவ்வொன்றும் அந்தந்த வரிச் சட்டங்களுக்கு அமைவாக அறவிடப்படுவதால் வரிகளுக்குப் பொறுப்புடையவர்கள் தாமதமின்றி அவற்றைச் செலுத்த வேண்டும்.

தாமாக முன்வந்து செலுத்து வோருக்குக் கடந்த கால வருமான விவரங்கள் கேட்கப்படமாட்டாது. கடந்த வருடங்களில் தலைமையகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வரி சேகரிப்பு இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வர்த்தகர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

வர்த்தகர்கள் தமக்குள்ள தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்து உரிய வரிகளை நியாயமான முறையில் செலுத்த வேண்டும். அதேபோன்று சிமெந்து விநி யோகஸ்தர்களும் போட்டிகளைத் தவிர்த்து விநியோகப் பகுதிகளைப் பதிவுசெய்து கொள்ளவேண்டும் என்றார்.

Related Posts