சிலை வைக்கும் அளவுக்கு இங்கு எந்த நடிகர் இருக்கிறார் – சிவகுமார் பேச்சு

மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை ஐகோட்டில் நேற்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

sivakumar

இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

சிறுவயதில் சிலரது முகம் அழகற்று இருக்கலாம். ஆனால் அவர்களின் நல்ல வாழ்க்கை முறையின்படி பின்னர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். காந்தியடிகள், ஆபிரகாம்லிங்கன் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

சமஅளவு முகம் ஒவ்வொரு நாளும் 166 முறை பிரணாயாமம் செய்தால் 166 ஆண்டுகள் வாழலாம் என்று முன்னோர் கூறியுள்ளனர். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். நான் தினமும் 84 முறை பிரணாயாமம் செய்கிறேன்.

மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சமஅளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும்.

எனக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடது தாடை சற்று பெரியதாக இருக்கும். எம்.ஜி.ஆருக் கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரியதாக அமைந்திருக்கும்.எல்லா லட்சணமும்கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்தி மாலாதான். என்றார்

Related Posts