சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலக ரயிலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சஞ்சீவ ரணசிங்க என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ரயில் திணைக்கள ஊழியர் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட அலுவலக ரயில் இரவு 7.10 மணிக்கு சிலாபம் ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலை சுத்தப்படுத்த ஊழியர் சென்றபோது ரயிலுக்குள் இருந்த பொதி ஒன்றை சோதனை செய்தபோது அது வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை அடி நீலமான பிளாஸ்டிக் குழாய் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த பிளாஸ்டிக் குழாயில் ISIS என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழாயினுள் வெடிமருந்து மற்றும் இரும்புத் துண்டு இருந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.