சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கோட்டா யாழில் உறுதி!

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மேலும் அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும்கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையை ஆரம்பித்த அவர், “சுதந்திரத்திற்கு பின்னர் இருந்த அரசியல்வாதிகள் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளை வழங்கியதால், உங்களிற்கு எம்மத்தியில் நம்பிக்கையில்லாமல் போயிருக்கலாம்.

அனால் நீங்கள் என்னில் நம்பிக்கை வைக்கலாம். நான் பொறுப்பேற்ற அனைத்தையும் 100 வீதம் நிறைவேற்றியிருக்கிறேன். நான் தேர்தல் விஞஞாபனத்தில் உங்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறியிருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களின் அனைத்து பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கு பல இராணுவ முகாம்களும், இராணுவத்தினரும் இருந்தனர். ஆனால் 2009 இன் பின்னர் இராணுவம் இருந்த தனியார் காணிகளில் 90 வீதமானவற்றை நான் விடுவித்தேன்.

நான் தேர்தல் விஞஞாபனத்தில் அபிவிருத்தியை பற்றியே விசேடமாக பேசியிருக்கிறேன். அந்த விஞஞாபனத்தில் விவசாயிகளிற்கு உரம், நிவாரணம் வழங்க, கடன்களை இரத்து செய்ய அதில் குறிப்பிட்டுள்ளேன்.

இளைஞர்கள் தமான கல்வியை பெற்றுக்கொள்ளாததால் வேலையற்று பிரச்சனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனது அரசின் கீழ் தரம்மிக்க கல்விக்காக பாரிய கல்வியை வழங்குவேன். உயர்தரம் சித்தியடைந்து பல்கலைகழகம் போக முடியாதவர்களிற்கும் பல்கலைகழகம் போக வசதியேற்படுத்துவேன்.

சாதாரணம் சித்தியடைந்து உயர்தரம் சித்தியடையாத மாணவர்களிற்கு தொழிற்கல்வி, தொழில்நுட்ப,கைத்தொழில் அறிவை பெற்றுக்கொடக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

நாம் குறுகிய, நீண்டகால திட்டமாக நல்ல கல்வியை வழங்குவோம். அதை முடித்தவர்களிற்கு வெலைவாய்ப்பு கிடைக்கும் விதமான கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வொம்.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்றமடைய காரமாக இருந்தது அறிவு சார்ந்த பொருளாதாரம். இலங்கை இளைஞர் யுவதிகள் நல்ல திறமைசாலிகள். கணினி, தொழில்நுட்ப அறிவை அவர்களிற்கு வழங்குவோம். இந்தியாவிலும் இப்படியான திட்டங்கள் உள்ளன.

பொருளாதார விருத்தியை எற்படுத்த, இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை கொடுக்கவும் நான் நடவடிக்கை எடுப்பேன். அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன்” என கூறினார்.

Related Posts