சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள செவாறோ – டொனெஸ்க் நகரில் கடுமையான மோதல்கள் தொடர்கின்றன.

ரஷ்ய படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதில் உக்ரைன் படையினர் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரியுபோல் நகரில் இரும்பு ஆலை மீது கடந்த 3 மாதங்களாக ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதுடன், வான்வெளி மற்றும் கடல் வழியாக நடந்த இந்த போரில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் மரணம் அடைந்த 210 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷ்யா ஒப்படைத்துள்ளதாக அந்தநாட்டின் இராணுவ புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த இரும்பு ஆலையில் இன்னும் எத்தனை வீரர்களின் உடல்கள் உள்ளதென தெரியவில்லை என்றும் அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளதுடன், ஒப்படைக்கப்பட்ட வீரர்களை அடையாளம் காணும் பணி தெடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

Related Posts