Ad Widget

சிறைச்சாலையில் பயிற்சி பெறும் தமிழ் அதிகாரிகள் மீது தாக்குதல்!!

கொழும்பு உள்ள சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் உள்ள தமிழ் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு 40 தமிழர்கள் சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

அவர்கள் தங்கியுள்ள விடுதியில் புகுந்த 100க்கும் அதிகமான சிங்கள அதிகாரிகளும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பயிற்சி பெறும் சிங்கள மாணவர்களும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அவர்களில் எட்டு பேர் கடும் காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அத்துடன் குறித்த மாணவர்கள் அனைவரும் நிர்வாணமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts