சிறைச்சாலையில் இருந்து கொலைக் குற்றவாளி உட்பட நான்கு கைதிகள் தப்பி ஓட்டம்!

முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தப்பி ஓடியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி செல்வபுரம் பகுதியில் இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சுன்னாகத்தை சேர்ந்த கொலைக் குற்றவாளி உட்பட 4 பேர், இவ்வாறு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் கடந்த ஆனி மாதம் முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சபம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பேரும் இதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தப்பித்து சென்ற குறித்த சிறை கைதிகளை தேடும் பணியை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts