சிறுவர் தொடர்பான விடயங்களில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வெகுஜன ஊடகங்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வௌியிடும் போது, சில ஊடகங்கள் தமது இருப்பு பற்றி சிந்தித்தே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது ஊடகங்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related Posts