சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

meetingயாழ் மாவட்டத்தில் அன்மைக்காலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி பிரிவு அலுவலர்கள் மேற் கொண்டுள்ளார்கள்.

இந்த வாரம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தனியாகவும் பெற்றேர்களுக்கு தனியாகவும் விழப்புணர்வுக் கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்குகளை யாழ்ப்பாணம வைத்தீஸ்வராக் கல்லூரி ,யாழ்ப்பாணம் புனித மரியாள் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல்களையும் கருத்தரங்குகளையும் கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம், யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் மகளிர் கல்லூரியிலும் நடத்தியுள்ளார்கள்.

இத்தகைய கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு பாடசாலை அதிபர்கள் ஆசிரியாகள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதுடன் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திறக்கு உட்பட்ட ஏனைய பாடசாலைகளிலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts