சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் பபா பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்திகளின் பாவனை அதிகரித்துள்ளமைக காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார நிறுவனங்களால் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ந்தும் அத்தகைய உற்பத்திகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹரகம வாய் தொடர்பான சுகாதார நிறுவனத்தின் நிபுணர் மருத்துவர் ஹேமந்த அமரசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Related Posts