சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் குறைபாடுகள்!

இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணவர் வைத்தியர் அனுஷா தன்னேகும்புர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு அதிகரிக்கும் போக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts