சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள்!!!!

நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் குறித்த விபத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து சிறு காயங்களுடன் உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கின்றார்.

குறித்த மனிதாபிமானம் இன்றிய சிறைக்காவலர்களின் செயற்ப்பாடு அனைவரது மனங்களையும் காயப்படுத்தி விட்டதாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்

Related Posts