Ad Widget

சிறுமியை பாலியல் துஸ்பிரத்திற்கு முயற்சித்த வைத்தியர் கைது

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் வைத்திய நிலையம் ஒன்றிற்கு சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமியை நிந்தவூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக அம்பாறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts