சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் அடித்து கொலை

வடக்கு டெல்லியில் வீட்டில் இருந்த சிறுமியைகடத்த முயற்சித்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு டெல்லியில் உள்ள கஜோரி காஸ் பகுதியில் இ பிளாக் வீட்டில் இருந்த ஒரு சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை சுற்றி வளைத்த அக்கம் பக்கத்தினர் குழந்தை திருடன் என கூறி அவனை அடித்துக் கொன்றது.

கொல்லப்பட்ட இளைஞரின் உடல் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தாக்கிய கும்பல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts