சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்: மக்கள் விசனம்!

சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.

தப்பிச் சென்றுள்ளவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரை பொலிஸார் திட்டமிட்டே தப்பிக்கவிட்டுள்ளதாகவும், சிறுமிகளைக் கடத்தும் அவரால் சமூகத்துக்கு ஆபத்து உள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தப்பிச் சென்றவரைக் கைது செய்யப் பொலிஸார் தவறினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துப் போராட்டம் நடத்துவோம் என்றும் நாவாந்துறை மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts