சிறுமியுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த 70 வயது முதியவருக்கு விளக்கமறியல்!

யாழில் ஆறு வயது சிறுமியுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் ஒருவர் தவறான நோக்கத்துடன் கையை பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், முதியவரை கைது செய்து நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது வழக்கை விசாரித்த பதில் நீதவான், முதியவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்ககுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts