சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, இதுவரை 3 ஆயிரம் ரூபாவாக இருந்த மாதாந்த கொடுப்பனவுத் தொகையை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு அரசாங்கத்தினால் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts