கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில 23,26,22 மற்றும் 24 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.